இலங்கையில் எரிபொருள் QR முறையில் பாரிய மோசடி
20 பங்குனி 2026 வெள்ளி 13:07 | பார்வைகள் : 989
புதிய எரிபொருள் கியூ. ஆர் குறியீடுகளை மோசடிகளுக்காக உருவாக்கியமை தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவிக்கையில்,
முறைமையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில், தனிநபர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாகனங்களுக்காக அங்கீகரிக்கப்படாத கியூ. ஆர் குறியீடுகளை உருவாக்கியுள்ளனர்.
ஒரே நாளில் சுமார் 600,000 புதிய கியூ. ஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிக்கல்களுக்கு மத்தியிலும், கியூ. ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாகத் தொடர்வதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் இரட்டை எண்கள் (Even digits) அல்லது பூச்சியத்தில் (0) முடியும் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே வெள்ளிக்கிழமை (20) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan