Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி !

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி !

19 பங்குனி 2026 வியாழன் 17:24 | பார்வைகள் : 1965


உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதனைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்று வியாழக்கிழமை (19) தங்கத்தின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தை நிலவரங்களின்படி, இன்றைய நிலவரம் பின்வருமாறு;

ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 362,500 ரூபா வரை குறைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாக 13,000 ரூபாவால் விலை சரிவடைந்துள்ளது.

இன்று காலை 9,000 ரூபாவால் குறைந்திருந்த விலை, மதிய நேரமாகும்போது மேலும் 4,000 ரூபாவால் வீழ்ச்சியடைந்து இந்த நிலையை எட்டியுள்ளது.

நேற்று புதன்கிழமை (18) ஒரு பவுண் 22 கரட் தங்கம் 374,400 ரூபாவாகக் காணப்பட்டது.

24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுண் 394,000 ரூபா வரை குறைந்துள்ளது.

நேற்று இதன் விலை 407,000 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களே இந்தத் திடீர் விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, தங்க ஆபரணக் கொள்வனவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.