பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக....
19 பங்குனி 2026 வியாழன் 15:13 | பார்வைகள் : 1412
பிரசாந்த் நடித்த ‛கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு', கார்த்தி நடித்த ‛சந்தித்தவேளை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரவிச்சந்திரன். கடைசியாக 2019ல் நட்பதிகாரம் என்ற படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். ‛‛முதன் முதலாய்'' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடி உள்ளார். இந்த பாடலின் புரொமோ வீடியோ இன்று மாலை வெளியானது. முழு பாடல் நாளை வெளியாகிறது.
இதுபற்றி ரவிச்சந்திரன் கூறுகையில், ‛‛ஆரம்பத்தில் இருந்தே இசை மீது ஆர்வம் இருந்தது. படங்களுக்கு இசையமைப்பதாக இது ஆரம்பமானது. அப்படியே ஆல்பமாக வெளியாகி உள்ளது. நானே பாடல் வரிகளையும் எழுதி உள்ளேன். அடுத்து படங்களுக்கும் இசையமைக்க போகிறேன். பிரபுதேவா மகன் ரிஷி இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல பாடல்களையும், படங்களும் இயக்குவேன்'' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan