"France Libre”– புதிய அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பலுக்கு பெயர் சூட்டிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!!
19 பங்குனி 2026 வியாழன் 07:45 | பார்வைகள் : 3491
பல மாதங்களாக ஊகங்களுக்கு இடமளித்திருந்த புதிய தலைமுறை விமானம் ஏந்தும் கப்பல் (PA-NG) தொடர்பான முக்கிய அறிவிப்பை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வெளியிட்டுள்ளார். Charles de Gaulle கப்பலுக்கு பதிலாக வரவிருக்கும் புதிய கப்பலுக்கு “France Libre” என பெயரிடப்படுவதாக அவர் அறிவித்தார்.
Nantes அருகிலுள்ள Naval Group கப்பல் கட்டுமானத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதனை அறிவித்ததுடன், இந்த கப்பல் 2038ஆம் ஆண்டில் சேவைக்கு வரும் என்றும், இதன் செலவு சுமார் 10 பில்லியன் யூரோ என மதிப்பிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
சுமார் 80,000 டன் எடையும் 310 மீட்டர் நீளமும் கொண்ட இந்த புதிய கப்பல், தற்போதைய Charles de Gaulle கப்பலைவிட இரட்டிப்பு அளவிற்கு பெரிதாக இருக்கும். இதில் 2,000 கடற்படையினர் பணியாற்றும் வசதியுடன், 30 போர் விமானங்கள், குறிப்பாக Dassault Rafale மற்றும் எதிர்கால NGF விமானங்கள், ஹாக்காய் ரேடார் விமானம், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகள் இணைக்கப்படும். அதேசமயம், இதன் அதிகபட்ச வேகம் 27 knots (சுமார் 50 கி.மீ/மணி) ஆக இருக்கும்.
அணு சக்தி இயக்கத்துடன் இயங்கும் இந்த கப்பல், எரிபொருள் நிரப்பு தேவையின்றி நீண்டகாலம் செயல்பட முடியும். மேலும், இதன் மின்காந்த (EMALS) கேடபால்ட் அமைப்பு, விமானங்களை விரைவாகவும் துல்லியமாகவும் பறக்க விடும் திறனை வழங்கும். தற்போது இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கப்பல் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், பிரான்சின் கடல் வழி இராணுவ சக்தியை நிலைநிறுத்த இது அவசியம் என இராணுவ அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். உலகின் இரண்டாவது பெரிய கடல் பொருளாதாரப் பகுதியைக் கொண்ட நாடாக இருக்கும் பிரான்சிற்கு, இந்த வகை விமானம் ஏந்தும் கப்பல்கள் முக்கியமான மூலோபாய ஆதாரமாக பார்க்கப்படுகின்றன. 2038ஆம் ஆண்டில் Charles de Gaulle ஓய்வு பெறவுள்ளதால், அதற்கு மாற்றாக இந்த புதிய “France Libre” கப்பல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய செல்வாக்கை உறுதி செய்யும் முக்கிய முதலீடாக கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan