அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
19 பங்குனி 2026 வியாழன் 07:41 | பார்வைகள் : 295
சாதனைகள், கொள்கைகள் இல்லாததால் ஆபாசங்கள், அவதூறுகளை அள்ளி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அதிமுகவை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan