இந்தியாவுடன் பல பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஒப்பந்தம்!!
13 மாசி 2026 வெள்ளி 09:00 | பார்வைகள் : 2383
பிரான்சின் ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு பல பில்லியன் யூரோக்கள் செலவில் ஒப்பந்தமிட உள்ளது.
இம்மாதம் 17 தொடக்கம் 19 ஆம் திகதிவரையான நாட்களில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ‘கைச்சாத்திட உள்ளது’ என்பதை பெப்ரவரி 12, நேற்று வியாழக்கிழமை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 114 ரஃபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குவதாகவும், இதற்காக 33 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரான்ஸ்-இந்தியா ஒப்பந்தத்தோடு பிரான்சிடம் இதுவரை 299 இரானுவ போர் விமானங்கள் வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஒப்பந்தமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan