சீட்டிழுப்பில் 700,000 யூரோக்கள் அதிஷ்ட்டம்!!
13 மாசி 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3021
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீட்டிழுப்பு நிறுவனம் ஒன்றில், முதன்முறையாக 700,000 யூரோக்கள் வெல்லப்பட்டுள்ளது.
FDJ கட்டுப்பாட்டு சபைக்குட்பட்ட Crescendo எனும் சீட்டிழுப்பு நிறுவனம் கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனை பலரும் ஆர்வத்தோடு வாங்கியிருந்தார்கள். இந்நிலையில், கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி சனிக்கிழமை ஒருவர் 700,000 யூரோக்கள் வெற்றியீட்டியுள்ளார்.
அவர் வெற்றியீட்டியதை நேற்று வியாழக்கிழமை FDJ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய Crescendo ஒவ்வொரு வார சனிக்கிழமையும் பகல் 1 மணிக்கு 100,000 யூரோக்களுடன் ஆரம்பமாகிறது. பின்னர் அதில் இருந்து ஒவ்வொரு ஒருமணிநேரத்துக்கும் 100,000 யூரோக்களால் அதிகரித்துக்கொண்டே இருக்கும். மாலை 7 மணிக்கு இந்த போட்டி நிறைவடையும் போது 700,000 யூரோக்களில் சென்று நிறைவடையும்.
ஒவ்வொரு மணிநேரத்தின் முடிவிலும் குலுக்கப்படும். இடையில் யாரேனும் வெற்றி பெற்றால் அந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டு குலுக்கல் நிறைவடையும். இறுதியாக வென்றால் முழுத்தொகை வழங்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan