ஜெயலலிதா பிறந்தநாளில் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவிக்கிறார் பழனிசாமி!
13 மாசி 2026 வெள்ளி 07:18 | பார்வைகள் : 202
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.,24ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 2021 தேர்தலில் 179 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்ட நிலையில், இத்தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க., என நான்கு அணிகள் உள்ளன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புதியபாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதாதளம் செக்யூலர் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தே.மு.தி.க.,வும், புதிய தமிழகமும் இணைய வாய்ப்புள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 2021 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., த.மா.கா., கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அ.தி.மு.க., 179 தொகுதிகளிலும், பா.ஜ., 20, பா.ம.க., 23, த.மா.கா., 6 தொகுதிகளிலும் போட்டியிட்டு 39.71 சதவீதம் ஓட்டுகளை பெற்றன.
அதே கட்சிகள் இத்தேர்தலிலும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் வரவாய்ப்புள்ளதால் அ.தி.மு.க., ஏற்கனவே வெற்றி பெற்ற, குறைந்த ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்த 164 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
எம்.ஜி.ஆர்., பிறந்தநாளான ஜன.,17ல் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிட்ட நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.,24ல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்ட 179 தொகுதிகளில் 33.29 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. இத்தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என பழனிசாமி நம்பிக்கையுடன் உள்ளார்.
பா.ஜ.,வுக்கு 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க., முன்வந்துள்ளது. அ.ம.மு.க.,வுக்கு 8, பா.ஜ., 'கோட்டாவில்' இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சிக்கு தலா 2, புதிய பாரதம் கட்சிக்கு ஒன்று வழங்கப்படும்.
த.மா.கா.,வுக்கு 5, பா.ம.க.,வுக்கு 10, தே.மு.தி.க., சேரும் பட்சத்தில் 8, புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க., முடிவுசெய்துள்ளது. பா.ஜ., ஏற்பாட்டில் கூட்டணியில் சிறு கட்சிகள் இணையும் பட்சத்தில் அக்கட்சிகளுக்கு பா.ஜ., கோட்டாவில் 'சீட்' ஒதுக்க வாய்ப்புள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan