Paristamil Navigation Paristamil advert login

லூவர் அருங்காட்சியகம் மற்றும் வெர்செய் அரண்மனை டிக்கெட் மோசடி: ஒன்பது பேர் கைது!!

லூவர் அருங்காட்சியகம் மற்றும் வெர்செய் அரண்மனை டிக்கெட் மோசடி: ஒன்பது பேர் கைது!!

12 மாசி 2026 வியாழன் 20:55 | பார்வைகள் : 431


லூவர் அருங்காட்சியகம் மற்றும் வெர்செய் அரண்மனை டிக்கெட் மோசடி வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லூவரின் இரண்டு பணியாளர்கள், சில சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மோசடி வலையமைப்பை அமைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் இதில் அடங்குகின்றனர். 

957,000 யூரோக்களுக்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் 486,000 யூரோக்கள் வங்கி கணக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லூவருக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 10 மில்லியன் யூரோக்களுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. “சந்தேகநபர்கள் இந்த தொகையின் ஒரு பகுதியை பிரான்ஸிலும் துபாயிலும் உள்ள நிலசொத்துகளில் முதலீடு செய்துள்ளனர்” என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி, பணம் சுத்திகரிப்பு மற்றும் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெரிய திருட்டு, தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பணியாளர் போராட்டங்கள் போன்ற பல சிக்கல்களையும் லூவர் அருங்காட்சியகம் எதிர்கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்