Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் CID பணிப்பாளரின் பெயரை பயன்படுத்தி மோசடி மின்னஞ்சல்!

இலங்கையில் CID பணிப்பாளரின் பெயரை பயன்படுத்தி மோசடி மின்னஞ்சல்!

12 மாசி 2026 வியாழன் 17:13 | பார்வைகள் : 136


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றை ஒரு நபர் அல்லது குழுவினர் இந்த நாட்களில் பொதுமக்களுக்கு அனுப்பி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara. Director of the Criminal Investigation Department (CID), Colombo 07, Sri Lanka, NationWide Could, Protection 24/7) எனப் போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றையே ஒரு நபர் அல்லது குழுவினர் இவ்வாறு பொதுமக்களுக்கு அனுப்பி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மின்னஞ்சல் செய்தி எந்த வகையிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தி அல்ல என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

noucinatacha20@gmail.com, police.cid.lk@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக அனுப்பப்பட்டுள்ள மேற்படி போலி மின்னஞ்சல் செய்திகள், பொதுமக்களை ஏமாற்றுதல், பண மோசடி செய்தல் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், மேற்படி செய்தியை அனுப்பிய நபர்கள் அல்லது குழுவினர் தொடர்பான தகவல்களைக் கண்டறிவதற்கும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக அனுப்பப்படும் செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு, உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்