Paristamil Navigation Paristamil advert login

தோல் அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் தெரியுமா?

தோல் அரிப்பு  ஏற்படுவதற்கான காரணம்  தெரியுமா?

12 மாசி 2026 வியாழன் 15:31 | பார்வைகள் : 154


உடலில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவது லேசான அறிகுறி இல்லை என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக பகல்நேரத்தில் வேலை கெட்டு, இரவுநேரத்தில் தூக்கம் சீர்குலையும் அளவுக்கான அரிப்பு பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். அதுவும் உடலில் எந்த சொறியும் இல்லாமல், தோல் அரிப்பு ஏற்படத் தொடங்கினால் அதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.

பெரும்பாலானோர் அரிப்பு வெப்பம், ஒவ்வாமை போன்றவற்றால் ஏற்படும் என நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதால்கூட இது ஏற்படலாம். நமது தோலானது, வெளிப்புறத்தால் மட்டுமன்றி, உடலின் உட்புறத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான் அத்தியாவசிய வைட்டமின்களின் குறைபாடு இருந்தால் தோல் வறண்டு, உயிரற்றதாகவும், உணர்திறன் மிக்கதாகவும் மாறும்.

அப்படியான சில ஊட்டச்சத்து குறைபாடுகளால்தான் அரிப்பு, எரிதல், தடிப்புகள் மற்றும் சிரங்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனை முன்கூட்டியே கண்டறிந்தால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அந்தவகையில் எந்த வைட்டமின் குறைபாடு அரிப்பை அதிகரிக்கும் என்பது பற்றி இங்கே அறியலாம்...

சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வைட்டமின் ஏ உதவுகிறது. இது குறைவாக இருக்கும்போது வறண்ட, கரடுமுரடான சருமம் உருவாகும். இது சருமத்தை உரித்துவிடக்கூட செய்யும். வறண்ட சருமமானது, அரிப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த குறைபாடு இருந்தால் முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களைச் சுற்றி அரிப்பு அதிகமாக இருக்கும்.

நரம்புகள் மற்றும் ரத்தம் சீராக இயங்க வைட்டமின் B12 அவசியம். இதன் குறைபாடு லேசான தோல் வெடிப்புகள், எரிதல் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும். பலருக்கு கைகள் மற்றும் கால்களில் அரிப்பு மற்றும் கூச்ச உணர்வும் ஏற்படுகிறது.

வைட்டமின் பி3 குறைபாடு இருந்தால் தோல் சிவத்தல், உரிதல் மற்றும் அரிப்பு அதிகரிப்பை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், சிறிய காயங்களும் தோன்றக்கூடும். வெயிலில் செல்லும்போது தோல் எரியும் வாய்ப்பு அதிகம்.

சருமத்தைப் பழுதுபார்க்க வைட்டமின் சி அவசியம். இது குறைவாக இருந்தால், சருமம் பலவீனமாகவும், வறண்டதாகவும், சேதமடையும் வாய்ப்புள்ளதாகவும் மாறும். அரிப்பு மற்றும் சிறிய தடிப்புகள் கூட தோன்றக்கூடும்.

வைட்டமின் இ: இந்த வைட்டமின் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. இதன் குறைபாடு சருமத்தை மந்தமாகவும், வறண்டதாகவும், அரிப்புடனும் இருக்கும்படி செய்யக்கூடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்