சிவப்பு எச்சரிக்கை! - 850,000 வீடுகள் இருளில்.. ஒருவர் பலி! - கோரதாண்டவமாடும் புயல்!
12 மாசி 2026 வியாழன் 07:46 | பார்வைகள் : 445
பிரான்சின் தென் மாவட்டங்களை கடும் புயல் சூறையாடி வருகிறது. இன்று பெப்ரவரி 12, வியாழக்கிழமை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பலி!
அங்கிருந்து கிடைக்கும் பிரத்யேக தகவல்களின் படி, சற்று முன்னர் ஒருவர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது. கனரக வாகனம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் அதன் சாரதி கொல்லப்பட்டுள்ளார். Landes நகரில் இச்சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை!
வெள்ளம் மற்றும் பனிச்சரிவு காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு அதிகபட்சமான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கொட்டித்தீர்க்கும் மழையினால் Gironde மற்றும் Lot-et-Garonne ஆகிய இரு மாவட்டங்களுக்கும், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் சூறாவளி காரணமாக Aude மாவட்டத்துக்கும், பனிச்சரிவு காரணமாக Savoie மாவட்டத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
850,000 வீடுகள் இருளில்!
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக 850,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக மின் விநியோகம் செய்யும் Enedis நிறுவனம் அறிவித்துள்ளது. Nouvelle-Aquitaine மாவட்டத்தில் 485,000 வீடுகளும், Occitanie மாவட்டத்தில் 318,000 வீடுகளும் இதில் உள்ளடங்குகிறது.
பாடசாலைகள்!
Aude மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பூங்காக்கள், புல்வெளி தோட்டங்கள், கல்லறைகளும் பொதுமக்கள் பாவனைக்கு மூடப்படுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan