பேருந்துக்குள் கத்தியுடன் ஏறிய நபர் மீது துப்பாக்கிச்சூ!
12 மாசி 2026 வியாழன் 07:00 | பார்வைகள் : 3225
பொது போக்குவரத்து பேருந்து ஒன்றில் கத்தியுடன் ஏறிய நபர் ஒருவர் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளார்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் பெப்ரவரி 11, நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Gobelins தரிப்பிடத்தில் வந்த 91 ஆம் இலக்க பேருந்தில் ஏறிய ஒருவர், பேருந்தில் இருந்த பயணி ஒருவரை தாக்கியுள்ளார்.
தாக்குதலாளியை பயணி சமாளிக்க முற்பட்ட வேளையில், அவர் மறைத்து வைத்திருந்த கத்தி ஒண்றை உருவி எடுத்துள்ளார்.
அதை அடுத்து பயணி பேருந்தை விட்டு இறங்கி Boulevard Saint-Marcel பகுதி வழியாக தப்பி ஓடியுள்ளார்....
வீதி கண்காணிப்பில் நின்றிருந்த காவல்துறையினர் இச்சம்பவத்தை பார்த்துவிட்டு, ஆயுததாரியை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
ஆயுததாரியை அடக்கும் நோக்கோடு, அவரது கால்களை குறி வைத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இதில் ஆயுததாரி காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan