டி20 உலகக்கிண்ணத்தில் அபிஷேக் ஷர்மா திடீர் விலகல்...? மருத்துவமனையில் அனுமதி
11 மாசி 2026 புதன் 10:03 | பார்வைகள் : 1695
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருப்பதால், அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை நடைபெற உள்ள நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) வயிற்று பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களாக அவர் மருவத்துவமனையில் இருப்பதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
துணை பயிற்சியாளர் டென் டோஷேட், "அபிக்கு இன்னும் வயிற்றில் பல பிரச்சனைகள் உள்ளன.
இரண்டு நாட்களில் அவர் ஆட்டத்திற்கு தயாராக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
எனினும், அபிஷேக் ஷர்மா தயாராக இல்லை என்றால், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan