Paristamil Navigation Paristamil advert login

பிரபல அங்காடியில் கொள்ளை முயற்சி! - வீதியில் துரத்தி துரத்தி வெட்டு!!

பிரபல அங்காடியில் கொள்ளை முயற்சி! - வீதியில் துரத்தி துரத்தி வெட்டு!!

10 மாசி 2026 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 426


பிரபல பல்பொருள் அங்காடியில் கொள்ளையில் ஈடுபட முற்பட்ட ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 9, நேற்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Avenue de Versailles  வீதியில் அமைந்துள்ள Gifi  அங்காடிக்கு கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளார். கொள்ளையிடுவதற்காக முதலில் கண்ணீர் புகை குண்டு ஒன்றை வீசியுள்ளான். ஆனால் அங்கு மேற்கொண்டு நடந்தவை அனைத்தும் கொள்ளையன் திட்டமிட்டதல்ல.

குறித்த Gifi  அங்காடியின் மேலாளர் (மேனேஜர்) கத்தி ஒன்றை உருவி எடுத்து கொள்ளையனை துரத்தியுள்ளார்.  கொள்ளையன் பயத்தில் அங்காடிக்குள் இருந்து வெளியேறி வீதியில் ஓட, அவரை வீதி வரை துரத்திக்கொண்டு சென்ற மேலாளர், நடுவீதியில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் அவரே காவல்துறையினரையும் அழைத்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தாக்குதல் மேற்கொண்ட மேலாளரை கைதும் செய்தனர்.

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்