முதல் உலகக்கிண்ணத்தில் படுதோல்வியடைந்த இத்தாலி! சம்பவம் செய்த பந்துவீச்சாளர்
10 மாசி 2026 செவ்வாய் 05:19 | பார்வைகள் : 1307
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இத்தாலி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
2026 டி20 உலகக்கிண்ணத்தின் 7வது போட்டியில் ஸ்கொட்லாந்து-இத்தாலி அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் குவித்தது. ஜார்ஜ் முன்சி 84 (54) ஓட்டங்களும், பிரண்டன் மெக்முல்லன் 41 (18) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய இத்தாலி அணியில் ஜஸ்டின் மோஸ்கா டக்அவுட் ஆகி வெளியேற, அதிரடி காட்டிய ஜேஜே ஸ்மட்ஸ் 11 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் அந்தோணி மோஸ்கா (13) ஆட்டமிழக்க, மனென்டி சகோதரர்களான ஹாரி, பென் இருவரும் கைகோர்த்து ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹாரி மனென்டி (Harry Manenti) 25 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாசிய நிலையில் லீஸ்க் ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்த ஓவரிலேயே பென் மனென்டி 52 (31) ஓட்டங்கள் குவித்த நிலையில் டேவிட்சன் பந்துவீச்சில் ஜோன்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லீஸ்க் 4 விக்கெட்டுகளும், வாட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தமது முதல் உலகக்கிண்ண போட்டியிலேயே இத்தாலி கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan