Paristamil Navigation Paristamil advert login

அவதானம்! - பிஸ்கட்டுகளில் ‘ஒவ்வாமை’ ஆபத்து! - மீளப்பெறப்படுகின்றன!

அவதானம்! - பிஸ்கட்டுகளில் ‘ஒவ்வாமை’ ஆபத்து! - மீளப்பெறப்படுகின்றன!

10 மாசி 2026 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 372


Lu Granola நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு பிஸ்கட் பொதிகள் மீளப்பெறப்பட்டுள்ளன.

Aldi, Auchan, Carrefour, Casino, Cora, Intermarché,  Lidl, Leclerc, Monoprix, Schiever, Systèm U போன்ற அனைத்து விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் இந்த Granola பிஸ்கட்டுகள் மீளப்பெறப்படுகின்றன.

பிஸ்கட்ஸ் பொதியில் உள்ள சேமானம் பட்டியலில் ‘பால்’ இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடவில்லை என காரணம் சொல்லப்பட்டே அவை மீளப்பெறப்படுகின்றன.

பால் மூலம் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் தவறுதலாக இந்த பிஸ்கட்டுகளை உண்ணும் போது அதனால் பாதிப்படையலாம் என கருதியே இது அறிவிக்கப்படுவதாகவும், ஒக்டோபர் 27, 2025 தொடக்கம் ஜனவரி 29, 2026 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொதி செய்யப்பட்ட பிஸ்கட்டுகள் வாங்கியிருந்தால் அவற்றை உண்ணவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்