1,80,000 பரிசியர்களின் குடிநீர் ஆபத்தில்??
9 மாசி 2026 திங்கள் 08:42 | பார்வைகள் : 367
1,80,000 பரிசியர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் பாதுகாப்பு தற்போது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. Nonville (Seine-et-Marne) பகுதியில் Bridge Energies நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இரண்டு புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
2024 ஜனவரியில், இந்த பணிகளுக்கான அரச அனுமதியை எதிர்த்து Eau de Paris நிறுவனம் மெலுன் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், குடிநீரின் தரம் பாதிக்கப்படும் அபாயம் குறித்து மக்கள் மற்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு எதிராக, Seine-et-Marne மற்றும் பரிஸ் பகுதிகளைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நொன்வில் மேயர் மற்றும் Eau de Paris நிறுவனத் தலைவர் ஆகியோர் இணைந்து அரசாங்கத்திற்கு திறந்த கடிதம் அனுப்பியுள்ளனர். திட்டமிடப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகள், 1,80,000 பரிசியர்களுக்கும் அருகிலுள்ள Villemer கிராமத்தின் 789 குடியிருப்பாளர்களுக்கும் குடிநீர் வழங்கும் நீர்ப்பிடிப்பு பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளதால், இதை அவர்கள் “உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு” என எச்சரிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan