இங்கிலாந்திற்கு பயத்தை காட்டிய நேபாள வீரர்கள்! காப்பாற்றிய சாம் கர்ரன்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி
9 மாசி 2026 திங்கள் 07:20 | பார்வைகள் : 1239
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து, நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தெல் 55 (35) ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 53 (32) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய நேபாள அணியில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடி காட்டி இங்கிலாந்திற்கு பயத்தை காட்டினர்.
குறிப்பாக லோகேஷ் பம் (Lokesh Bam) 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கடைசி ஒவரில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட, சாம் கர்ரன் (Sam Curran) துல்லியமாக பந்துவீசினார்.
நேபாள அணியால் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் இங்கிலாந்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நேபாள அணியில் திபேந்திர சிங் 44 (29) ஓட்டங்களும், லோகேஷ் 39 (20) ஓட்டங்களும் விளாசினர். லியாம் டாவ்ஸன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan