Paristamil Navigation Paristamil advert login

France Travail-க்கு புதிய அதிகாரங்கள்: மோசடி சந்தேகம் ஏற்பட்டால் சமூக நலத்தொகை நிறுத்தம்!! வசிப்பிடம் கண்காணிப்பு!!

France Travail-க்கு புதிய அதிகாரங்கள்: மோசடி சந்தேகம் ஏற்பட்டால் சமூக நலத்தொகை நிறுத்தம்!! வசிப்பிடம் கண்காணிப்பு!!

8 மாசி 2026 ஞாயிறு 20:12 | பார்வைகள் : 415


தொழிலாளர் அமைச்சர் Jean-Pierre Farandou, வேலைவாய்ப்பு உதவித்தொகை அல்லது சமூக நல உதவிகளைப் பெறும் நபர்களிடம் கடுமையான மோசடி சந்தேகம் இருந்தால், அந்த உதவிகளை விசாரணை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தலாம் என ஆதரவு தெரிவித்துள்ளார். 

குறிப்பாக வெளிநாட்டில் வசித்தபடியே உதவித் தொகை பெறுவது போன்ற மோசடிகளைத் தடுப்பதே அவரது நோக்கமாகும். இதற்காக, சமூக மற்றும் வரி மோசடிகளை எதிர்க்கும் ஒரு சட்ட மசோதா செனட் சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, பிப்ரவரி இறுதியில் தேசிய சபையில் பரிசீலிக்கப்பட உள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், France Travail நிறுவனம் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மூலம் நலத்தொகை பெறுபவர்களின் வசிப்பிடத்தை கண்டறிய அதிகாரம் பெறும்.

அரசு மதிப்பீட்டின்படி, 2025 ஆம் ஆண்டில் சமூக மோசடிகளால் ஏற்படும் இழப்பு 14 பில்லியன் யூரோக்கள் ஆகும். இதில்:

  • 52% மறைமுக வேலை (travail dissimulé),
  • 12% சுகாதார நிபுணர்கள் தொடர்பான மோசடிகள்,
  • 36% சமூக காப்பீடு பெற்ற நபர்களின் மோசடிகள் ஆகும். 

இந்த புதிய சட்டத்தின் மூலம், நீண்ட காலத்தில் பல பில்லியன் யூரோக்களை மீட்டெடுக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்