Paristamil Navigation Paristamil advert login

கிரிப்டோ நாணய கடத்தல்: நீதிபதி மற்றும் அவரது தாயார் பாதுகாப்பாக மீட்பு!! ஐவர் கைது!!

கிரிப்டோ நாணய கடத்தல்: நீதிபதி மற்றும் அவரது தாயார் பாதுகாப்பாக மீட்பு!! ஐவர் கைது!!

8 மாசி 2026 ஞாயிறு 14:49 | பார்வைகள் : 2345


இசேர் பகுதியில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில், நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

30 மணி நேரம் அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் கிரிப்டோ நாணயமாக, பெரும் தொகையை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் லியோன் Lyon (Rhône) பகுதியில் நடைபெற்றுள்ளதுடன், சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடத்தப்பட்ட பெண்களில் ஒருவர் 35 வயதுடைய நீதிபதி ஆவார். அவர், கிரிப்டோ நாணயங்களில் சிறப்பு பெற்ற ஒரு லியோன் நிறுவன மேலாளரின் மனைவி. அவரது தொழில்முறை செயல்பாடுகளே இந்த கடத்தலுக்குக் காரணம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நீதிபதியும் அவரது 67 வயதுடைய தாயாரும் கிரெனோபிள் Grenoble (Isère) அருகே உள்ள வீட்டிலிருந்து கடத்தப்பட்டு, பின்னர்  Bourg-lès-Valence (Drôme) பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த கடத்தல் அனுபவமற்ற இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான குற்றச்செயல் ஆகும். 

18 முதல் 20 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் சமூக ஊடகங்கள் வழியாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. நீதிபதியின் துணைவர் தற்போது எந்த கிரிப்டோ நாணயங்களையும் வைத்திருக்கவில்லை என்றும், முன்பு இருந்த முதலீடுகள் நிலச் சொத்துகளாக மாற்றப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.