அஜித்துக்கு சொன்ன கதையில் பாலையா!
8 மாசி 2026 ஞாயிறு 13:23 | பார்வைகள் : 1386
கோலிவுட் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். கடந்த பல வருடங்களாகவே விஜய்க்கு போட்டி நடிகராக வலம் வந்தவர். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து தற்போது மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர், ரசிகைகள் கூட்டம் உண்டு.
அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உறுதியானாலும் இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஏனெனில், இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார்.. இந்த சம்பளத்தை கொடுத்து இந்த படத்தை எடுக்க எந்த தயாரிப்பாளரும் இதுவரை முன்வரவில்லை. இது ஒருபுறம் இருக்க தேடி வந்த ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணியிருக்கிறார் அஜித். தெலுங்கில் பல படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்தவர் இவர்தான்.
மலையாள நடிகர் உன்னு முகுந்தனை வைத்து மார்கோ படத்தை இயக்கிய ஹனீப் அடேனியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க விரும்பிய தில் ராஜு அஜித்துக்காக ஒரு கதையை எழுத சொல்லியிருக்கிறார். அதன்பின் அஜித் தரப்பிடம் இதுபற்றி பேசியிருக்கிறார் தில் ராஜு.
ஆனால் அஜித்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். எனவே அந்த இயக்குனரை பாலையாவிடம் அனுப்பி கதையை சொல்ல, அந்த கதை பாலையாவுக்கு பிடித்து போட்டதால் தற்போது பாலையா வைத்து அந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவிருக்கிறார்.
தனது புதிய படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில் தன்னை தேடி வந்த ஒரு தயாரிப்பாளரை அஜித் மிஸ் பண்ணிருப்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan