உயிரைக் காப்பாற்ற - தம்பியை கொலை செய்த அண்ணன்!!
7 மாசி 2026 சனி 18:03 | பார்வைகள் : 3524
தனது உயிரைக் காப்பாற்ற தப்பியின் உயிரை பறிந்த சம்பவம் ஒன்று பரிசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் துழாவி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெப்ரவரி 6, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். rue de Belleville வீதியில் உள்ள குறித்த வீட்டுக்கு காவல்துறையினர் சென்றடைந்த போது, நிலமை கைமீறிச் சென்று, வீடு முழுவதும் இரத்தக்கறை தோய்ந்திருந்தது.
45 வயதுடைய ஒருவர் அவரது இளைய சகோதரனைக் கத்தியால் பல தடவை வெட்டியுள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் தம்பி இருக்க, அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஆனால் அது கைகொடுக்கவில்லை. அவர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விசாரணைகளில், கொல்லப்பட்ட தம்பி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் கத்தி ஒன்றின் மூலம் அவரது அண்ணனை கொல்ல முற்பட்டதாகவும், தனது உயிரைக் காப்பாற்றவே பதிலுக்கு தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan