15 வயதிற்குக் கீழ் வீடியோ கேம்களுக்கு தடை? புதிய விவாதம்!!
7 மாசி 2026 சனி 15:24 | பார்வைகள் : 3730
ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், இளைஞர்களிடையே வீடியோ கேம்கள் ஏற்படுத்தும் வன்முறை மற்றும் உடல்-மனநல விளைவுகள் குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்னர் தனது கருத்துகளை விளக்கியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் போலவே, சில வீடியோ கேம்களை சிறார்களுக்கு தடை செய்யலாமா அல்லது வயதுக்கு ஏற்ப அணுகலை கட்டுப்படுத்தலாமா என்ற கேள்வி எழுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 7 அல்லது 8 வயதிலேயே வன்முறை உள்ள விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடுவது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், வீடியோ கேம் துறையை அவர் எதிர்க்கவில்லை என்றும் மக்ரோன் தெளிவுபடுத்தி உள்ளார். இந்தத் துறை ஒரு முக்கியமான கலாச்சாரமும் பொருளாதாரமும் கொண்டது என்றும், பிரான்சில் மின்விளையாட்டுக்கள் மற்றும் வீடியோ கேம் தொழில்துறையை வளர்க்க அவர் தொடர்ந்து ஆதரவு வழங்கியுள்ளதாகவும் நினைவூட்டியுள்ளார். ஆனால் ஒரு துறையை ஆதரிப்பது, அதன் விளைவுகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இளைஞர்கள் வீடியோ கேம்களால் உடல் மற்றும் மனநல விளைவுகளை ஆய்வு செய்ய இரண்டு மாதங்களுக்கான ஒரு அறிவியல் ஆய்வை தொடங்க முடிவு செய்துள்ளார். இந்த ஆய்வு நிபுணர்கள் மற்றும் தேசிய டிஜிட்டல் கவுன்சிலிடம் ஒப்படைக்கப்படும். அதன் முடிவுகளின் அடிப்படையில், சட்டப்படி தடை அல்லது கட்டுப்பாடு தேவையா என்பது குறித்து பொதுமக்கள் விவாதத்துடன் முடிவு எடுக்கப்படும் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan