டென்மார்க் முழுதும் கடும் பனிப்பொழிவு - விமானங்கள் ரத்து
7 மாசி 2026 சனி 13:21 | பார்வைகள் : 1815
டென்மார்க் முழுதும் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுப்போக்குவரத்து இயங்கவில்லை பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானப் பயணச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கோப்பன்ஹேகன் (Copenhagen) அமைந்துள்ள கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வரை பனிமழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அதேவேளை பாரிஸ், பெர்லின் ஆகிய இடங்களுக்கான விமானப் பயணங்கள் ரத்தாகியுள்ளன.
பனிப்பொழிவு மோசமாக இருப்பதால் சில பயணங்களில் தாமதங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதோடு டென்மார்க்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான ஆஹூசில் (Aarhus) பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan