பல்வேறு மாவட்டங்களுக்கு - அனர்த்த எச்சரிக்கை!!
7 மாசி 2026 சனி 12:05 | பார்வைகள் : 3404
இன்று பெப்ரவரி 7, சனிக்கிழமை பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை, இந்த வார இறுதி நாட்களிலும் தொடர உள்ளதாக Météo France எதிர்வு கூறியுள்ளது.
Charente, Charente-Maritime, Corrèze, Côtes d'Armor, Dordogne, Finistère, Gironde, Ille-et-Vilaine, Loire-Atlantique, Maine-et-Loire, Morbihan, Deux-Sèvres, Var, Vendée மற்றும் Vienne ஆகிய 15 மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து தடைப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire