GALLIA CALISMA பால்மாவும் மீள பெறப்படுகிறது!!
6 மாசி 2026 வெள்ளி 21:43 | பார்வைகள் : 439
பிப்ரவரி 5 அன்று Danone நிறுவனம் Gallia மற்றும் Blédilait பால்மாக்களை தயாரிப்புகளை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.
GALLIA CALISMA 1er AGE 0-6 mois 800G பால்மா தொகுதிகள்
| GTIN | முடிவுத்திகதி |
| 3041091461292- | 31/10/2026 |
| 3041091461292- | 26/11/2026 |
| 3041091461292- | 24/01/2027 |
| 3041091461292- | 20/02/2027 |
Gallia Calisma Relais 1er âge (0 à 6 mois) 830 g பால்மா முடிவுத்திகதி 13/10/2026
Blédilait 1er âge (0, 6 mois), 400 g பால்மா, முடிவுத்திகதி 29/10/2026.
Bacillus cereus என்ற பக்டீரியாவால் உருவாகும் செரியூலைடு என்ற நச்சுப் பொருள் இதில் கண்டறியப்பட்டதே இதற்குக் காரணம். இந்த நச்சு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த மாசுபாடு, சீன தொழில்துறை நிறுவனம் தயாரித்த அராசிடோனிக் அமிலம் அதிகம் கொண்ட எண்ணெயிலிருந்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; அந்த எண்ணெயை பல பெரிய உணவு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன.
டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து நடைபெறும் இந்த மீட்புகள், பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) செரியூலைடிற்கான அனுமதிக்கப்பட்ட அளவை குறைத்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த மீட்பு மேற்கொள்ளப்படுவதாக டனோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan