ஜெஃப்ரி எப்ஸ்டீன் மனித மாமிசம் சாப்பிட்டாரா?
6 மாசி 2026 வெள்ளி 18:55 | பார்வைகள் : 297
பாலியல் குற்றவாளியும் நிதியாளருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
நடுக்கமூட்டும் பல குற்றச்சாட்டுகளின் அலைகளைத் தூண்டியுள்ள நிலையில் மனித மாமிசம் உண்ணுதல் மற்றும் சடங்கு ரீதியான பலி போன்ற குற்றச்சாட்டுகளும் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு வழக்குகளின் பின்னணியில், விசாரணைக்காக காத்திருந்த எப்ஸ்டீன் 2019 ல் திடீரென்று சடலமாக மீட்கப்பட்டார்.
தற்போது ஜனவரி 30 ஆம் திகதி அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஏராளமான ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
அதன் பிறகு, அந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் அல்லது அவரது சமூக வட்டாரத்தில் உள்ளவர்கள் குழந்தைகளைச் சாப்பிட்டது.
மனித மாமிசம் உண்டது மற்றும் சடங்கு ரீதியான கொலைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்குவதாகக் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
அந்த ஆவணங்களில் உள்ள மின்னஞ்சல்கள் மற்றும் நேர்காணல் பதிவுகளில் இருந்து சில பகுதிகளைத் தெரிவு செய்து மேற்கோள் காட்டியதன் மூலம், இந்த குற்றச்சாட்டுகள் விரைவாகப் பரவலான கவனத்தைப் பெற்றன.
எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாகவும், இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதாகவும் கூறப்படும்.
இங்கு மில்லியன் கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள், ஆனால் நல்ல காய்கறி கிரீம் சீஸ் மிகக் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே உரையாடலில் உள்ள மற்றொரு வரி, கிரீம் சீஸும் குழந்தையும் ஒரே மட்டத்தில் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த உரையாடல் Nadia Marcinko என்பவருடன் நடந்ததாக அடையாளம் காணப்பட்டது.
Nada Marcinkova என அறியப்படும் இவர் எப்ஸ்டீனின் விமானியாக செயல்பட்டு வந்துள்ளார்.
அத்துடன், 2024 முதல் இவர் தலைமறைவாக உள்ளார். அந்த ஆவணங்கள் உரையாடலின் பின்னணியைத் தெளிவுபடுத்தவில்லை.
ஆனால் சிரார்கள் மற்றும் கிரீம் சீஸ் ஆகிய வார்த்தைகள் அருகருகே இடம்பெற்றிருப்பது, இணையத்தில் மனித மாமிசம் உண்ணுதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளது.
2009ல் கைது செய்யப்பட்ட 21 வயது மொடல் ஒருவர், மேட்டுகுடி மக்களின் விருந்தில், அவர்கள் மனித மாமிசம் சாப்பிடுகிறார்கள், சடங்குகளைச் செய்கிறார்கள், மற்றும் பலிகளை நடத்துகிறார்கள் என்று கூச்சலிட்ட காணொளியை எப்ஸ்டீன் ஆவணங்களுடன் இணையவாசிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.
உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின்படி, எப்ஸ்டீன் ஆவணங்களில் 'மனித மாமிசம் உண்பவர்' என்ற சொல் 52 முறையும், 'மனித மாமிசம் உண்ணுதல்' என்பது ஆறு முறையும் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், இவற்றில் எதுவும் சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துகளை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றே தெரிய வருகிறது. ஆனால், 2000ல் எப்ஸ்டீனின் சொகுசு படகில் சிறார்கள் மிக மோசமான துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதை நேரிடையாக பார்த்ததாக ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan