கிரீஸ் இல் அகதிகளுடன் சென்ற படகு விபத்து - 15 பேர் பலி
6 மாசி 2026 வெள்ளி 18:53 | பார்வைகள் : 2035
கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக அகதிகள் படகு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தது.
இதன்போது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதில் பயணித்த அனைவரும் கடலில் வீழ்ந்த நிலையில் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு கடலோர காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சியோஸ் ஸ்கைலிட்சியோ (Skylitseio) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் காயமடைந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்களின் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிர்தப்பியவர்கள் வழங்கிய தகவலின்படி, குறித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan