இலங்கையில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய பெண்
6 மாசி 2026 வெள்ளி 13:31 | பார்வைகள் : 1529
ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண் வீடமைப்புத் தொகுதி ஒன்றில் தற்காலிகமாக வீடொன்றைப் பெற்றுத் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 17 கிலோ கிராம் ஹேஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி 1 கோடியே 50 இலட்சம் (ஒன்றரை கோடி) ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஆவார். அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவருக்கு எதிராக ஏற்கனவே 4 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan