சாரா அர்ஜுன் சிரஞ்சீவியின் மகளாக ?
6 மாசி 2026 வெள்ளி 10:59 | பார்வைகள் : 1242
தமிழில் வெளிவந்த தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜூன். பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது ஐஸ்வர்யா ராயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் .
சமீபத்தில் ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான படம் ' தூரான்தர்' . இதில் கதாநாயகியாக நடித்து இன்னும் பிரபலமானார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 158வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இதில் கதாநாயகியாக பிரியாமணி நடிக்கவுள்ளார். இதில் இடம்பெறவுள்ள சிரஞ்சீவியின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்க கிர்த்தி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அது கைகூடவில்லை. இப்போது இதில் சாரா அர்ஜுன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan