Paristamil Navigation Paristamil advert login

அலர்ஜி அபாயம் காரணமாக நாடு முழுவதும் வனிலா ஐஸ்கிரீம் திரும்பப் பெறப்படுகிறது!!

அலர்ஜி அபாயம்  காரணமாக நாடு முழுவதும் வனிலா ஐஸ்கிரீம் திரும்பப் பெறப்படுகிறது!!

5 மாசி 2026 வியாழன் 21:31 | பார்வைகள் : 406


அலர்ஜி அபாயம் காரணமாக U கடைகளில் விற்பனை செய்யப்பட்ட U Bio மடகஸ்கார் வனிலா ஐஸ்கிரீம் பிரான்ஸ் முழுவதும் திரும்பப் பெறப்படுகிறது. 

471 கிராம் பெட்டியில் விற்கப்பட்ட இந்தப் ஐஸ்கிரீமில் பொதி செய்யப்பட்ட முறை மற்றும் லேபிளிங் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது 3256221116045 என்ற பார்கோட்டைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொகுதி DA6016 ஆகும், பாவனைக்கு உகந்ந காலம் 31/01/2028 வரையாகும்.  

வனிலா ஐஸ்கிரீம், தவறுதலாக “எலுமிச்சை சோர்பே” என்று குறிப்பிடப்பட்ட பெட்டியில் நிரப்பப்பட்டதால், பால் தொடர்பான தகவல்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் இந்த ஐஸ்கிரீமை உண்ண வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதை வாங்கியவர்கள் ஏப்ரல் 3 வரை கடையில் திருப்பி வழங்கி பணத்தை திரும்பப் பெறலாம். தேவையான தகவல்களுக்கு Magasins U வாடிக்கையாளர் சேவையை (0 969 366 936) தொடர்பு கொள்ளலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்