Paristamil Navigation Paristamil advert login

எலான் மஸ்கின் அலுவலகத்துக்குள் நுழைந்து அதிரடி! - பழிவாங்கியதா பிரான்ஸ்!!??

எலான் மஸ்கின் அலுவலகத்துக்குள் நுழைந்து அதிரடி! -  பழிவாங்கியதா பிரான்ஸ்!!??

5 மாசி 2026 வியாழன் 18:26 | பார்வைகள் : 4427


உலகின் முதலாவது பணக்காரரான எலான் மஸ்கின் பரிசில் உள்ள 
அலுவலகம் பிரெஞ்சு சைபர் கிரைம் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது. “இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” என மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

சமூகவலைத்தளங்கள் பயன்பாட்டுக்கு பிரான்ஸ் வைத்துள்ள கட்டுப்பாடுகளை மஸ்க்கின் X சமூகவலைத்தளம் (முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்ட) பின்பற்றவில்லை என குற்றம் சாட்டப்படு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் CSAM எனப்படும்  “சட்டவிரோத தரவு பிரித்தெடுத்தல் மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை வைத்திருப்பதில் உடந்தையாக இருத்தல்” பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக X தளத்தோடு இணைந்து செயற்படும் Grok  செயற்கை நுண்ணறிவு செயலி சமூகத்துக்கும் சிறுவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பாலியல் ரீதியான படம் மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குகிறது எனவும் பிரெஞ்சு சைபர் கிரைம் தெரிவிக்கிறது.

எலான் மஸ்க் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “பிரான்ஸ் அரசியல் பழிவாங்குகிறது. இது அரசியல் தாக்குதல்!” என குற்றம் சுமத்தினார்.