இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல்
6 மாசி 2026 வெள்ளி 08:34 | பார்வைகள் : 175
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்த கூட்டறிக்கையை 4-5 நாட்களில் இறுதி செய்து கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அந்த அறிக்கை கையெழுத்திடப்பட்டதும், அது ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாக மாற்றப்படும்.
கூட்டறிக்கை கையெழுத்திடப்பட்ட பிறகு, இந்தியாவுக்கான வரிகளை 18 சதவீதமாகக் குறைப்பது குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்கா வெளியிடும். சட்டப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திடுவது, சில அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைப்பதற்கு வழிவகுக்கும்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan