Paristamil Navigation Paristamil advert login

2026 பட்ஜெட்: பொதுமக்களின் பணப் பையை மாற்றும் முக்கிய முடிவுகள்!!

2026 பட்ஜெட்: பொதுமக்களின் பணப் பையை மாற்றும் முக்கிய முடிவுகள்!!

5 மாசி 2026 வியாழன் 14:25 | பார்வைகள் : 1382


2026 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் பட்ஜெட், பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் அரசு செலவுகளை குறைக்க சில சமூக உதவிகள் மற்றும் வரி சலுகைகளை நீக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் கைவிடப்பட்டன. இதன் விளைவாக, அரசு செலவுகள் குறையாமல், மாறாக அதிகரித்துள்ளது. 

இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு நன்மையும் தீமையும் ஒருங்கே உள்ளன. சமூக உதவிகள் தொடர்பாக நல்ல செய்தி உள்ளது. APL, RSA, குடும்ப உதவிகள் மற்றும் ஓய்வூதியங்கள் சுமார் 1% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

 “l'année blanche” என்ற திட்டம் கைவிடப்பட்டதால், பணவீக்கத்திற்கு ஏற்ப உதவிகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான Prime d’activité உதவி, சில குடும்பங்களுக்கு மாதம் சராசரியாக 50 யூரோ வரை அதிகரிக்கப்படுகிறது.

வரி விவகாரங்களில், வருமான வரி பட்டியல் 0,9% உயர்த்தப்படுகிறது. இதனால், வருமானம் சற்றே உயர்ந்தாலும் பல குடும்பங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது. 

ஓய்வுபெற்றோருக்கான 10% வரி கழிவும் தொடர்கிறது; இதை நீக்க அரசின் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் ஓய்வுபெற்றவர்கள் இந்த பட்ஜெட்டின் முக்கிய பயனாளர்களாக உள்ளனர்.

ஆனால் சில எதிர்மறை அம்சங்களும் உள்ளன. CPF மூலம் ஓட்டுநர் உரிமம் பெறும் வசதி இனி வேலை தேடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சில சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு விதிக்கப்படும் வரி உயர்த்தப்பட்டுள்ளது, 

மேலும் PER தொடர்பான வரி சலுகைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. MaPrimeRénov உதவி திட்டம் தொடர்ந்தாலும், நிலுவையில் உள்ள கோப்புகள் அதிகமாக இருப்பதால் அதன் எதிர்கால நடைமுறை குறித்து இன்னும் தெளிவாகவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்