ஒரு பெண் எப்போது போற்றப்படுகிறாள் தெரியுமா?
5 மாசி 2026 வியாழன் 14:19 | பார்வைகள் : 1897
தனக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ளும் வரைதான். ஆனால், என்று அவள் தனக்கான மரியாதையை எதிர்பார்க்கத் தொடங்குகிறாளோ, அன்றே அவள் மீதான விமர்சனங்களும் தொடங்கிவிடுகின்றன...எல்லைகளும் முத்திரைகளும்
மரியாதையின்மை மற்றும் ஏமாற்று வேலைகளைச் சகித்துக்கொள்ளாத பெண்கள், இன்று மிக எளிதாக தலைக்கனம்_பிடித்தவர்கள்" அல்லது அனுசரித்துப்போகத் தெரியாதவர்கள்" என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்...
சமூகம் பெண்களிடம் எதிர்பார்ப்பது தியாகத்தை' மட்டுமே, ஆனால் ஒரு பெண் தன் சுயமரியாதையை' முன்னிறுத்தும்போது, அது பலருக்குத் #திமிராகத் தெரிகிறது...
மெளனம் கலைப்பதன் விளைவு பொய்களையும், அதிகாரத் தோரணையையும் தட்டிக்கேட்கும் ஒரு பெண்ணை நோக்கி வரும் முதல் அம்பு...
இவள்_குடும்பத்தை_உடைப்பவள் அல்லது நச்சுத்தன்மை கொண்டவள். தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்ளும் அதே வேளையில், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டும் பெண் மட்டும் பிரச்சனைக்குரியவள் எனச் சித்தரிக்கப்படுவது காலங்காலமாக நடக்கும் ஒரு அநீதி...
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டங்கள், ஒரு ஆண் அதிகாரத்துடன் பேசினால் அது தலைமைப் பண்பு, ஆனால் அதே உறுதியுடன் ஒரு பெண் பேசினால் அது ஆட்டிப்படைக்கும் குணம்...
தன் விருப்பத்தைச் சொன்னால் அவள் பிடிவாதக்காரி, மற்றவர் விருப்பத்திற்காகத் தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே அவள் அன்பானவள்... உண்மை மறைக்கப்படுவதில்லை தன் மதிப்பையறிந்து, தன் மன அமைதியைப் பாதுகாக்கப் பழகிய ஒரு பெண் ஒருபோதும் கடினமானவள் அல்ல...
அவள் சமூகத்தின் போலித்தனங்களை உடைக்கத் துணிந்தவள். அவளுடைய நேர்மை பலருக்குத் தொந்தரவாக இருக்கலாம், ஏனென்றால் அவளுடைய மௌனம் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது... முடிவாக ஒரு பெண்ணை நோக்கி உனக்குத்_திமிர்_அதிகம் அல்லது நீ ரொம்ப மாறிட்ட, என்ற விமர்சனங்கள் வரும்போது, அவள் சரியான பாதையில் செல்கிறாள் என்று அர்த்தம்...தன்னை மற்றவர்களுக்காகச் சிறுமைப்படுத்திக் கொள்ள மறுக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு புரட்சியாளர்தான்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan