Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 09 பேர் பலி

பிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 09 பேர் பலி

5 மாசி 2026 வியாழன் 06:39 | பார்வைகள் : 2321


மத்திய பிலிப்பைன்ஸில் மலைப்பாங்கான பகுதியில் இருந்து லொறி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள பயாவன் நகரில் உள்ள விவசாய கிராமம் ஒன்றுக்கு மசகு எண்ணெய் மற்றும் வேறு சில பொருட்களை விநியோகித்து விட்டு தொழிலாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு  லொறியில் திரும் சென்றுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த லொறி வீதியை விட்டு  98 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாக அந்நாட்டு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில்,  ஐந்து பெரல் மசகு எண்ணெயும் இருந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற போது வானிலையும் சீராக இருந்துள்ளதோடு, விபத்துக்கான காரணம் இன்றும் வெளியாகவில்லை.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போதே தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மத்திய மாகாண பொலிஸ்  தலைவர் கர்னல் டிம்மர் ஆலம் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெற்று கொண்டே உள்ளது. பெரும்பாலும் போக்குவரத்துச் சட்டங்களை அமுல்படுத்துவதில் பலவீனம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், கரடுமுரடான வாகனங்கள் மற்றும் போதுமான வீதி பாதுகாப்பு தடைகள் மற்றும் அடையாளங்களே விபத்துக்களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகின்றன.