பிரேசிலில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து - 16 பேர் பலி
5 மாசி 2026 வியாழன் 06:06 | பார்வைகள் : 1935
பிரேசிலில் மத விழாவில் பங்கேற்கச் சென்றவர்களின் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உட்பட, 16 பேர் உயிரிழந்தனர்.
அலகோவாஸ் மாகாணத்தைச் சேர்ந்த, 60 பேர் மத விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாவோ ஜோஸ் டா டேபெரா என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி கவிழ்ந்தது.
இதனால், சில பயணியர் வெளியே வீசப்பட்டனர்; மற்றவர்கள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டனர். விபத்தில் ஏழு பெண்கள், ஐந்து ஆண்கள், நான்கு குழந்தைகள் என, 16 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan