Paristamil Navigation Paristamil advert login

ஈரான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் ஆளில்லா விமானத்தை  சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

4 மாசி 2026 புதன் 08:22 | பார்வைகள் : 2604


அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை 3.2.2026 சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரானிய ஷாஹெட்-139 ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல், இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் நடந்துள்ளது.

இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.