Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர்கள் அதிரடி மாற்றம்! - விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!!

அமைச்சர்கள் அதிரடி மாற்றம்! - விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!!

4 மாசி 2026 புதன் 07:00 | பார்வைகள் : 1538


அரசாங்கத்தில் அதிரடியாக சில மாறுதல்களை கொண்டுவர பிரதமர் Sébastien Lecornu திட்டமிட்டுள்ளார். அவரின் அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இது தீர்வாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் இந்த மாற்றம் இடம்பெற உள்ளது. சில அமைச்சர்கள் வேறு அமைச்சு பதவிகளுக்கு மாற்றப்பட உள்ளதாகவும், சிலர் பதவி நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தற்போதைய கலாச்சார அமைச்சராக உள்ள Rachida Dati, பரிஸ் மாநகரசபை மேயர் பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில், அவர் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சுயாட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைச்சர் பிரதிநிதியாக உள்ள Charlotte Parmentier Lecocq - அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேறு சில நகரங்களில் நகரசபை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்களும் உள்ளனர். அவர்களும் அரசாங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்