பாடசாலையில் பயங்கரம்! - ஆசிரியர் உயிராபத்தில்!!
3 மாசி 2026 செவ்வாய் 18:09 | பார்வைகள் : 2736
பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் படுகாயமடைந்தார்.
பிரான்சின் தென் பகுதியான Sanary-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் பெப்ரவரி 3, இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய மாணவன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக அறிய முடிகிறது.
மூன்று அல்லது நான்கு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் எனவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் மேற்கொண்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். பெருமளவிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
collège La Guicharde பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆசிரியரின் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan