Paristamil Navigation Paristamil advert login

ஈரான் அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடை - பிரித்தானியா விதிப்பு

ஈரான் அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடை -  பிரித்தானியா விதிப்பு

3 மாசி 2026 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 728


பிரித்தானியா மற்றும் ஈரானில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் போராட்டங்களை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது புதிய தடைகள் விதித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த தடைகள் 10 அதிகாரிகள் மற்றும் ஒரு அமைப்புக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்டவர்களில், ஈரான் உள்துறை அமைச்சர் Eskandar Momeni, லோரெஸ்தான் மாகாண பொலிஸ் தலைவர் Mohammad Reza Hashemifar, பொது பாதுகாப்பு பொலிஸ் தலைவர் Seyed Majid Feiz Jafari, மற்றும் IRGC-ன் Fars மாகாண தளபதி Yadollah Bouali உள்ளிட்டோர் அடங்குவர்.

மேலும், பல்வேறு இராணுவ மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் இதில் உள்ளனர்.

பிரித்தானிய அரசு இதற்கு முன்பே 550-க்கும் மேற்பட்ட ஈரான் அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதில் IRGC முழுமையாக அடங்குகிறது.

இந்த நடவடிக்கை, சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த அதேபோன்ற நடவடிக்கைகளுக்கு பின் எடுக்கப்பட்டது.

டிசம்பர் மாத இறுதியில், ஈரானில் ரியால் மதிப்பு கடுமையாக குறைந்ததால் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

ஆரம்பத்தில் அமைதியான முறையில் நடந்த போராட்டங்கள், பின்னர் வன்முறையாக மாறி, மசூதிகள், அரசு கட்டிடங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன.

“ஈரான் மக்கள், அமைதியான போராட்ட உரிமையை பயன்படுத்தியபோதும், அதற்கு பதிலாக கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டுள்ளனர். 

இந்த தடைகள், ஈரான் அதிகாரிகளை அதற்கு பொறுப்புக்கூறச் செய்வதற்கான முயற்சி” என பிரித்தானிய வெளிவிவகாரத் துறை அமைச்சர் Yvette Cooper தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்