Paristamil Navigation Paristamil advert login

தமிழர் பகுதியில் பயங்கரம்! - நடுவீதியில் வாள்வெட்டு!!

தமிழர் பகுதியில் பயங்கரம்! - நடுவீதியில் வாள்வெட்டு!!

2 மாசி 2026 திங்கள் 18:53 | பார்வைகள் : 669


தமிழர்கள் நிறைந்து வாழும் Bobigny இல் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sorbonne Paris Nord பல்கலைக்கழகத்துக்கு மிக அருகே Avenue de la Convention வீதியில் இச்சம்பவம் இன்று பெப்ரவரி 2, திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது. 5.20 மணி அளவில் தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் காவல்துறையினர், மருத்துவ உதவிக்குழுவினருடன் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

அங்கு நபர் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டவேளையில், அவர் உயிரிழந்துள்ளார்.

மிக ஆழமாக வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், நீண்ட வாள் ஒன்றினால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பரபரப்பான இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்