பெண் பொலிசாருக்கு நேர்ந்த துயரம்! - தரதரவென இழுத்துச் சென்ற கார்!!
2 மாசி 2026 திங்கள் 17:32 | பார்வைகள் : 3964
பொலிசார் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண் பொலிசார் ஒருவரை கார் ஒன்று தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் Argenteuil (Val-d'Oise.) நகரில் இடம்பெற்றது. பிற்பகல் 3 மணி அளவில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சில பொலிசார், அதிவேகமாக பயணித்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த கார் நிற்காமல் தொடர்ந்து பயணிக்க, பொலிசார் குறித்த காரை துரத்திச் சென்றனர்.
சில கிலோமீற்றர் துரத்தலின் பின்னர் கார் வீதி சமிக்ஞ்சை ஒன்றில் சிக்கி நின்றது. உடனடியாக பொலிசார் அக்காரை நெருங்கி, சாரதியை கைது செய்ய முற்பட்டனர்.
பெண் பொலிசார் ஒருவர் அவரைக் கைது செய்ய முற்பட்டபோது, திடீரென கார் அங்கிருந்து புறப்பட்டது. காரின் கண்ணாடிவழியாக பொன் பொலிசார் ஒருவர் சிக்கிக்கொள்ள, அவரையும் சேர்த்து கார் இழுத்துக்கொண்டு சென்றது.
நூறு மீற்றருக்கும் அதிகமாக கார் சென்றதாகவும், பின்னர் சக பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண் பொலிசார் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்பிக்கப்பட்டார். சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan