Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

 சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

2 மாசி 2026 திங்கள் 17:12 | பார்வைகள் : 713


கனடாவின் IRCC, சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அதிகரித்து வரும் விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து, மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

IRCC தெரிவித்ததாவது,

Study Permit பெறுவதற்கான கட்டணம் 150 கனேடிய டொலர் ஆகும். மாணவர்கள் தனியாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

ஆனால், விண்ணப்பத்தில் வழங்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் மாணவர்களே பொறுப்பானவர்கள். தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்கள் வழங்கப்பட்டால், விசா மறுக்கப்படுவதோடு, 5 ஆண்டுகள் வரை கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

அரசு குறிப்பிட்ட சில மோசடி அறிகுறிகள்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் Letter of Acceptance இல்லாமல் விண்ணப்பிக்கச் சொல்லுதல்.

பணம் கொடுத்தால் சேர்க்கை, scholarship அல்லது வேலை அனுமதி கிடைக்கும் என வாக்குறுதி அளித்தல்.

அனைத்து பாடப்பிரிவுகளும் Post-Graduation Work Permit பெறும் என தவறான தகவல் வழங்குதல்.

வேலை, நிரந்தர குடிவரவு (PR) அல்லது குறைந்த கட்டணத்தில் சேர்க்கை உறுதி செய்வதாக கூறுதல்.

சமூக ஊடகங்கள் மூலம் ஆவணங்கள் அல்லது பணம் கேட்பது.

மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி இல்லாத முகவர்கள், விசா அதிகாரிகளிடம் சிறப்பு அணுகல் இல்லை. அவர்கள் விண்ணப்பத்தை விரைவுபடுத்த முடியாது என IRCC மேலும் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் வெற்று படிவங்களில் கையொப்பமிடாமல், அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, பணம் செலுத்திய ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் நேரடியாக கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக புகாரளிக்குமாறு கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்