Paristamil Navigation Paristamil advert login

பக்டீரியா காரணமாக கோழிக் கால்கள் திரும்ப பெறப்படுகின்றன!!

பக்டீரியா காரணமாக கோழிக் கால்கள் திரும்ப பெறப்படுகின்றன!!

2 மாசி 2026 திங்கள் 14:04 | பார்வைகள் : 905


நாடு முழுவதும் உள்ள பல சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்ட சில கோழிக் கால்கள் (pilons de poulet), குறிப்பாக Le Gaulois மற்றும் பிற விநியோகஸ்தர்களும், லிஸ்டீரியா monocytogènes என்ற பக்டீரியாவால் மாசுபட்டுள்ளதால் மீள பெறப்படுகிறது. 

இந்த பக்டீரியா லிஸ்டீரியோசிஸ் எனும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடியது; இதன் அறிகுறிகள் எட்டு வாரங்கள் வரை தாமதமாக தோன்றலாம். இந்த மாசுபட்ட தயாரிப்புகள் 2026 ஜனவரி 24 முதல் 30 வரை, E.Leclerc, Carrefour, Auchan, Système U மற்றும் Francap கடைகளில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

Rappel Conso இணையதளம், இத்தயாரிப்புகளை இனிமேல் பயன்படுத்தவோ, உண்ணவோ வேண்டாம் என்றும், வீட்டில் இருந்தால் உடனடியாக அழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. மாசுபட்ட பொருட்களுக்கான பணத்தை திருப்ப பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தயாரிப்புகளை ஏற்கனவே உண்டவர்கள், காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Le Gaulois பிராண்டின் இரண்டு தயாரிப்புகள் மீளப்பெறப்படுகிறது.

Le Gaulois – Grignottes Extra Intense Spicy Curry

img_69809fb0e6758.jpg

GTIN: 3266980025724

Lot: 023/023

பயன்பாட்டு கடைசி தேதி: 14/02/2026

Grignottes Extra Saveur Japanese Teriyaki திரும்ப பெறப்படுகிறது.

img_69809fb0e1364.jpg

GTIN: 3266980025755

Lot: 023/023

பயன்பாட்டு கடைசி தேதி: 14/02/2026

Grignottes Indienne தயாரிப்புகளும் பக்டீரியா காரணமாக மீளப்பெறப்படுகிறது.

img_69809fb0f4023.jpg

GTIN: 3266980239886

Lot: 023/023

பயன்பாட்டு கடைசி தேதி: 14/02/2026

img_69809fb0eb6fa.jpg

GTIN: 3258561470528

Lot: 023/023

பயன்பாட்டு கடைசி தேதி: 14/02/2026

வர்த்தக‌ விளம்பரங்கள்