Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரிய அளவில் போர் வெடிக்கும் - ஈரான் உச்ச தலைவர்

அமெரிக்கா  தாக்குதல் நடத்தினால் பெரிய அளவில் போர் வெடிக்கும் - ஈரான் உச்ச தலைவர்

2 மாசி 2026 திங்கள் 07:12 | பார்வைகள் : 2506


ஈரானில் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் அமெரக்கா ஈரானை குற்றச்சாட்டும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும் என மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், போர்க்கப்பல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறியுள்ளதாவது,

அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஈரான் அமைதியாக இருக்காது. இந்த முறை மிகப் பெரிய அளவிலான போராக மாறிவிடும். 

சண்டையை துவக்கினால், இந்த முறை பிராந்திய அளவில் மிகப் பெரிய அளவுக்கு போர் வெடிக்கும் என அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களுக்கு எல்லாம் ஈரானியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டர்  இவ்வாறு அவர் கூறினார்.