பரிஸ் புறநகரில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! - மடக்கிப்பிடிக்கப்பட்ட கணவன்!!
1 மாசி 2026 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 4557
புறநகர் பரிசில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவன் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டர்.
Courbevoie (Hauts-de-Seine) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று ஜனவரி 31, சனிக்கிழமை மாலை துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். வீட்டுக்குள் பெண் ஒருவரது சடலம் ஒன்று இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சடலம் மீட்கப்பட்டது.
அதை அடுத்து, தலைமறைவாகியிருந்த அவரது கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் தாக்குதலுக்குட்பட்டு கொல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும் சடலம் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan