அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்! 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல்
1 மாசி 2026 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 1524
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டெஸ்டில் அர்ஜுன் டெண்டுல்கர் 36 ஓட்டங்கள் விளாசியதுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கோவா, கேரளா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிண்ணத் தொடர் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸை ஆடிய கோவா அணி 355 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
சுயாஸ் பிரபுதேசாய் 86 ஓட்டங்களும், சமர் ஷ்ரவன் 55 ஓட்டங்களும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) 39 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் விளாசினார்.
அங்கித் ஷர்மா 6 விக்கெட்டுகளும், பேசில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கேரளா 526 ஓட்டங்கள் குவித்தது.
153 ஓட்டங்கள் விளாசிய ரோஹன் குன்னும்மலின் (Rohan Kunnummal) விக்கெட்டை அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பற்றினார்.
கோவா பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த விஷ்ணு வினோத் (Vishnu Vinod) 128 பந்துகளில் 113 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 14 பவுண்டரிகள்) விளாசினார். லலித் யாதவ், அமுல்யா தலா 3 விக்கெட்டுகளும், அர்ஜுன் டெண்டுல்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் 171 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் கோவா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan