Enedis பெயரில் மோசடி தொலைபேசி அழைப்புகள்: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!!
1 மாசி 2026 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 3352
Enedis நிறுவனம், தங்களை Enedis அல்லது அதன் கூட்டாளிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு நடைபெறும் புதிய மோசடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் தொடர்பு முயற்சிகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
இம்மோசடிகளில் ஈடுபடுவோர் வணிக சலுகைகளை முன்வைப்பதோடு, தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களைப் பெற முயல்கிறார்கள். இத்தகைய சட்டவிரோத செயல்கள் கடுமையாக தண்டிக்கப்படக்கூடியவை என Enedis தெரிவித்துள்ளது.
மேலும், Enedis எந்தவிதமான வணிக விளம்பரங்களிலும் ஈடுபடுவதில்லை என்றும், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் வங்கி தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை என்றும் நினைவூட்டியுள்ளது. அதன் பணிகள் பொது சேவை தொடர்பானவையாக மட்டுமே இருப்பதுடன், அவசரமான மின்சார அபாயம் காரணமான பாதுகாப்பு நடவடிக்கையைத் தவிர, வீட்டிற்குள் நுழைய வேண்டிய சூழ்நிலையில் முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படும்.
மோசடி தொடர்புகளை சந்தித்தவர்கள் அல்லது கண்டவர்கள், Enedis வாடிக்கையாளர் சேவை அல்லது DGCCRF-க்கு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan